குற்றாலம் பேரருவியில் 2 ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து 2 ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து 2 ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
குற்றாலம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் பேரருவியில் செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றாலம் பேரருவி, பழைய குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் ஐந்தருவி, புலியருவியில் குளித்து மகிழ்ந்தனர். செவ்வாய்க்கிழமை இரவு தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து குற்றாலம் பேரருவியில் 2 ஆவது நாளாக புதன்கிழமை குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.