தமிழ்நாடு

உலக பிரசித்தி பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம், பாலமேட்டில் வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

DIN

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம், பாலமேட்டில் வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றதைத்தொடர்ந்து பாரம்பரியமிக்க பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. முதலில் பாலமேடு கிராம மகாலிங்க சாமி கோவில் காளைகள் உள்ளிட்ட கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு, ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி வைக்கப்பட்டது. போட்டியை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 783 காளைகள், 651 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு களத்தில் உள்ளனர். 

கரோனா பரவல் தடுப்புக்காக அரசின் நிலையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் மற்றும் உடன் வரும் உதவியாளா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

தெலங்கானாவின் பெருமை... டிஎஸ்பி சிராஜை வாழ்த்திய காவல்துறை!

பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!

மேகவெடிப்பால் திடீர் வெள்ளம்! குடியிருப்புகளை அடித்துச் செல்லும் காட்சி! | Uttarakhand flood

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

SCROLL FOR NEXT