தமிழ்நாடு

சேலத்தில் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்

DIN

தமிழகம் முழுவதும் இன்று 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. சேலத்தில் 9 மாதங்களுக்குப் பின் திறக்கப்பட்டிருப்பதால் பள்ளிகளுக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் வருகை தந்தனர்.

கரோனா நோய் தொற்று காரணமாக நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முகக்கவசம் அணிந்தவாறு பள்ளிக்கு வந்த மாணவர்களை இடைவெளி விட்டு நிற்க வைத்து உடலின் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது.

முகக்கவசம் அணிந்தபடி வகுப்பறையில் அமர்ந்திருக்கும் மாணவிகள். 

பின்னர், மாணவர்களுக்கு கிருமிநாசினிகள் வழங்கப்பட்டு பள்ளி வகுப்பறையில்  சமூக இடைவெளி விட்டு அமரும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

இடைவெளி விட்டு அமர்ந்தபடி பாடங்களை கவனிக்கும்படி மாணவர்களுக்கு சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அறிவுரை வழங்கினார்.
 

படங்கள்: வே.சக்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

SCROLL FOR NEXT