தெலங்கானாவில் கரோனா பாதிப்பு 2.92 லட்சமாக உயர்வு
தெலங்கானாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.92 லட்சமாக அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
தெலங்கானாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.92 லட்சமாக அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இது தொடர்பாக தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 267 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,92 லட்சமாக அதிகரித்துள்ளது.
புதிதாக இருவர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,583-ஆக அதிகரித்துள்ளது.
நோய் பாதிக்கப்பட்ட 3,919 பேர் தற்போது மருத்துமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
மாநிலத்தில் மொத்தமாக 2,86,893 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். கரோனா இறப்பு விகிதம் 0.54 சதவிகிதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 98.11 சதவிகிதமாகவும் உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை ஒரேநாளில் மாநிலத்தில் 27,471 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.