நெற்பயிர் அழிவு: இழப்பீடு கோரி இந்திய கம்யூ. மறியல்
நிவர், புரெவி புயல் தாக்குதலுக்கு பின்னர் பெய்த தொடர் கனமழையால் அழிந்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன
தமிழ்நாடுநெற்பயிர் அழிவு: இழப்பீடு கோரி இந்திய கம்யூ. மறியல்
நிவர், புரெவி புயல் தாக்குதலுக்கு பின்னர் பெய்த தொடர் கனமழையால் அழிந்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன
திருத்துறைப்பூண்டி: நிவர், புரெவி புயல் தாக்குதலுக்கு பின்னர் பெய்த தொடர் கனமழையால் அழிந்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நிவர், புரெவி புயல் தாக்குதலுக்கு பின்னர் பெய்த கன மழையினால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சம்பா பயிர்கள் முற்றிலுமாக அழிந்துள்ளதை கவனத்தில் கொண்டு அரசு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரியும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் பெறப்பட்ட கடன்கள் அனைத்தையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்யக் கோரியும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் முழு அளவிலான பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க கோரியும், பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரியும் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கும் விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவி அளிக்க வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே. உலகநாதன் தலைமையில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோ. பழனிசாமி முன்னிலையில் அழுகிய பயிர்கள் நெற்கதிர்களுடன் புதன்கிழமை சாலை மறியல் செய்தனர்.
இந்த சாலை மறியலில் அக்கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் வழக்குரைஞர் எம். வையாபுரி, மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.வி. சந்திரராமன், வி. முத்துக்குமரன், ஒன்றியக்குழு தலைவர் ஆ பாஸ்கர் கட்சியின் வட்டார செயலாளர் மணலி பாலு நகர செயலாளர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் 11 இடங்களிலும் முத்துப்பேட்டை வட்டாரத்தில் ஒன்றிய செயலாளர் முருகையன் தலைமையில் 7 இடங்களிலும் இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.