பிப்.2-ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
2021-ஆம் ஆண்டின் முதலாவது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
தமிழ்நாடுபிப்.2-ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
2021-ஆம் ஆண்டின் முதலாவது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
சென்னை: 2021-ஆம் ஆண்டின் முதலாவது தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக, சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்றும், ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், பிப்ரவரி 2-ஆம் தேதி கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தமிழக ஆளுநர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தை 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு வாலாஜா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டம், கலைவாணர் அரங்கம், மூன்றாவது தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் கூட்டியிருக்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்றே, அதாவது பிப்ரவரி 2-ஆம் தேதி காலை 11 மணிக்கு தமிழக ஆளுநர் உரை நிகழ்த்த உள்ளார்கள். அவ்வமயம் தங்கள் வருகையை வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.