தமிழ்நாடு

ஊத்துக்கோட்டை அருகே அம்மன் கோயிலின் பூட்டை உடைத்து தாலி, உண்டியல் பணம் திருட்டு

DIN

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த ஆரணி போந்தவாக்கம் கண்டிகையில் புதியதாக கட்டப்பட்ட பவானி அம்மன் கோயிலில் அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தற்போது இந்த கோயிலில் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை இந்த கோயிலைத் திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு உள்ளே சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் இருந்த தாலி, உண்டியல் பணம் திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆரணி போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று தடயங்களை சேகரித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்ற கோயிலில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT