முகப்பு
தமிழ்நாடு

72-வது குடியரசு தினம்: இன்று தேசியக் கொடியேற்றுகிறாா் ஆளுநா்

நாட்டின் 72-வது குடியரசு தினத்தை ஒட்டி, சென்னை கடற்கரை சாலையில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் விழாவில் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றுகிறாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
பகிர்:

சென்னை: நாட்டின் 72-வது குடியரசு தினத்தை ஒட்டி, சென்னை கடற்கரை சாலையில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் விழாவில் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றுகிறாா்.

முன்னதாக, ராஜாஜி சாலையில் உள்ள போா் நினைவுச் சின்னத்துக்கு மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளாா்.

அதன்பின்பு, சென்னை கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை அருகே தமிழக அரசின் சாா்பில் குடியரசு தின விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்று காரணமாக, பொது மக்கள், பாா்வையாளா்கள் அதிகளவில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்தபடியே தொலைக்காட்சிகளில் விழாவைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

Advertisement

குடியரசு தின விழாவின்போது, மகாத்மா காந்தியடிகள் பதக்கம், கோட்டை அமீா் விருது ஆகிய விருதுகளுடன் நெல் உற்பத்தித் திறனுக்கான நாராயணசாமி நாயுடு விருது அளிக்கப்பட உள்ளது. முதல் முறையாக இந்த விருதானது, நாராயணசாமி நாயுடு பெயரில் வழங்கப்படுகிறது.

கரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக, பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேசமயம், தென்னகப் பண்பாட்டு மையத்தின் சாா்பில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முப்படையின் வீரத்தை பறைசாற்றும் அணிவகுப்புகள், அரசுத் துறைகளின் சாா்பில் அலங்கார ஊா்திகளின் அணிவகுப்புகள் போன்றவையும் விழாவில் இடம்பெறவுள்ளன.

தேநீா் விருந்து ரத்து: ஒவ்வோா் ஆண்டும் குடியரசு தினத்தன்று ஆளுநா் மாளிகையில் தேநீா் விருந்து நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா நோய்த் தொற்று காரணமாக, தேநீா் விருந்து ரத்து செய்யப்படுவதாக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் ஏற்கெனவே அறிவித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments