முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் குடியரசு நாள் விழா 

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த வண்டலூர், ஊனமாஞ்சேரி தமிழ்நாடு உயர் பயிற்சியகம் அமைந்துள்ளது.

Updated On : 26 ஜனவரி, 2021 at 2:35 PM
தமிழ்நாடு காவல் உயர் பயிற்சி அகத்தில் குடியரசு நாள் விழா
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:53 AM


செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த வண்டலூர், ஊனமாஞ்சேரி தமிழ்நாடு உயர் பயிற்சியகம் அமைந்துள்ளது.

இந்த தமிழ் நாடு காவல் உயர் பயிற்சிகத்தில் குடியரசு நாள் விழா கொண்டாடப்பட்டது. 72-வது இந்திய குடியரசு நாள் விழா தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம் இயக்குனர் எஸ். டேவிட்சன் தேவாசீர்வாதம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து 11வது குழுவைச் சார்ந்த பயிற்சி துணை  கண்காணிப்பாளர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 

நிகழ்ச்சியில் உயர் பயிற்சியாக கூடுதல் இயக்குனர் என். பாஸ்கரன் துணை இயக்குனர்கள்  ஜெயலட்சுமி, எஸ் செல்வராஜ், காவல் உயர் பயிற்சியாக காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

காவல் துறை இயக்குனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் காவல் உயர் பயிற்சியில் பணி புரியும் காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் காவல் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.