37 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது ஒரு சவரன் தங்கம்
சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் 37 ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியுள்ளது.
சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் 37 ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது.
இந்நிலையில், சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.36,968-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து, ரூ.4,621 ஆக விற்க்கப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து, ரூ.70.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து, ரூ.70,800 ஆகவும் உள்ளது.
புதன்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம் ........ 4,621
1 சவரன் தங்கம் .........36,968
1 கிராம் வெள்ளி.........70.80
1 கிலோ வெள்ளி.........70,800
செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம் ... 4,636
1 பவுன் தங்கம் ....37,088
1 கிராம் வெள்ளி...71.30
1 கிலோ வெள்ளி...71,300