முகப்பு
தமிழ்நாடு

விழுப்புரம் அருகே ராணுவ வீரர் மற்றும் குடும்பத்தினர் மீது தாக்குதல்: ஓய்வு பெற்ற ராணுவ வீரர் நலச் சங்கத்தினர் புகார் அளிக்க திரண்டதால் பரபரப்பு

விழுப்புரம் அருகே ராணுவ வீரர் மற்றும் குடும்பத்தினரை தாக்கியர்கள் மீது நடவடிக்கைக் கோரி ஓய்வு பெற்ற ராணுவ வீரர் நலச் சங்கத்தினர் புகார் அளிக்க திரண்டதால் பரபரப்பு நிலவியது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:24 PM
புகார் அளிக்க திரண்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரர் நலச் சங்கத்தினர்.
பகிர்:

விழுப்புரம் அருகே ராணுவ வீரர் மற்றும் குடும்பத்தினரை தாக்கியர்கள் மீது நடவடிக்கைக் கோரி ஓய்வு பெற்ற ராணுவ வீரர் நலச் சங்கத்தினர் புகார் அளிக்க திரண்டதால் பரபரப்பு நிலவியது. 

விழுப்புரம் அருகே வளவனூர் குமாரக் குப்பத்தை சேர்ந்தவர் சுரேஷ். ராணுவ வீரரான இவர், காஷ்மீரில் பணியாற்றி வருகிறார்.

அண்மையில் விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்த இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மோகன் ராஜ் என்பவர் குடும்பத்திற்கும் முன்விரோதத்தில் பிரச்னை நடந்துள்ளது.

Advertisement

இதில், மோகன்ராஜ் தரப்பினர் மணல் கடத்துவதாக சுரேஷ் போலீசில் புகார் தெரிவித்ததாக தெரிகிறது.
இதில் இரு தரப்பினர் மோதிக் கொண்டதால் ராணுவ வீரர் சுரேஷ், அவரது தந்தை தாய் உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர்.

இது தொடர்பாக வளவனூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மோகன்ராஜை கைது செய்ய வலியுறுத்தி, ஓய்வுபெற்ற ராணுவ வீரர் நலச்சங்க தலைவர் சுரேஷ்பாபு என்பவர் தலைமையில், ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ராணுவத்தினர் 50 பேர் வெள்ளிக்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வந்து முறையிட்டனர்.

விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த ராணுவ வீரர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்திய அரசியல் கட்சி பிரமுகர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ராணுவ வீரர் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் நேரில் வந்து, மனுவை பெற்று நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments