தமிழ்நாடு

மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

DIN

சென்னை: கரோனா ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிய இன்னும் இரண்டு நாள்களே இருக்கும் நிலையில், மாவட்ட ஆட்சியர்களை சந்தித்துள்ளார் முதல்வர் பழனிசாமி.

தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனைக் கூட்டத்தைத் தொடங்கினார்.

இதனைத்தொடர்ந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று பிற்பகலில் மருத்துவக் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துவார். பின்னர் மாலை 5 மணிக்கு தலைமைச்செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. 

பி.2 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அமைச்சர்களுடனும் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

SCROLL FOR NEXT