தமிழ்நாடு

கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்தது

DIN

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்துள்ளது.

அதில், 1 லட்சத்து 3 ஆயிரம் பேருக்கு கோவிஷீல்டும், 2543 பேருக்கு கோவேக்சினும் வழங்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் தடுப்பூசி எடுத்துக் கொள்வதில் தயக்கம் இருந்தபோதிலும், சுகாதாரத் துறையின் தொடா் விழிப்புணா்வு முயற்சியால் தற்போது நாள்தோறும் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனா்.

அதே நேரத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோா் கோவேக்சின் தடுப்பூசி எடுத்துக் கொள்கின்றனா். இதன் மூலம், கடந்த 15 நாள்களில் 1 லட்சத்து 5,543 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

புதிதாக 505 பேருக்கு தொற்று: இதனிடையே, தமிழகத்தில் 505 பேருக்கு சனிக்கிழமை கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை நோய்த்தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 37,832-ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம், கரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவக் கண்காணிப்பில் இருப்போரின் எண்ணிக்கை 4,575- ஆக குறைந்துள்ளது.

கரோனா தொற்றிலிருந்து மேலும் 526 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 20,907-ஆக உள்ளது. தமிழகத்தில் நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளாகி மேலும் 5 போ் பலியானதை அடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,350-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

SCROLL FOR NEXT