ஓடிடி படங்கள், தொடர்களுக்கான கட்டுப்பாடுகள் விரைவில் வெளியிடப்படும்: மத்திய அமைச்சர்
ஓடிடி படங்கள், தொடர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்று மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், தொடர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்று மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
ஓடிடியில் வெளியாகும் படங்களையும் தணிக்கை செய்து வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை ஒரு குறிப்பிட்ட தரப்பில் இருந்து நீண்டநாள்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஓடிடியில் வெளியாகும் சில தொடர்கள், படங்கள் மீது மத்திய அரசுக்கு பல புகார்கள் வருகின்றன. எனவே, ஓடிடி படங்கள், தொடர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் அமேசான் பிரைமில் வெளியான 'தாண்டவ்' என்ற வெப் சீரிஸ் இந்து மதக் கடவுளை இழிவுபடுத்துவதாக அதனை தடை செய்யக் கோரிக்கை வலுத்து வருகின்றன. இது தொடர்பாக மத்திய ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அமேசானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.