கிருஷ்ணகிரி போலியோ சொட்டு மருந்து முகாம்: 1.59 லட்சம் குழந்தைகள் பயன் பெறுவர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ நோய் தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி.ஜெயசந்திரபானு ரெட்டி கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் முகாமை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுங்க வசூல் மையம் அருகே நடைபெறும் முகாமை அவர் ஆய்வு செய்தார். அப்போது சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், கிருஷ்ணகிரி வட்டாட்சியர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Advertisement
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மாநகராட்சி, கிருஷ்ணகிரி நகராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள் பேருந்து நிலையங்கள் சுகாதார நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 951 மையங்களில் இந்த சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது.
இதன் மூலம் ஐந்து வயதுக்கு உட்பட்ட 1,59,486 குழந்தைகள் பயன் பெறுவர்.