முகப்பு
தமிழ்நாடு

நீடாமங்கலம் ஒன்றியத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்

நீடாமங்கலம் ஒன்றியத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை ஒன்றியக் குழுத் தலைவர் சோம. செந்தமிழ்ச் செல்வன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
நீடாமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை ஐந்து வயதிற்குட்பட்ட  குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமை தொடங்கி வைத்தார் ஒன்றியக்குழுத் தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன்.
பகிர்:

நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஒன்றியத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை ஒன்றியக் குழுத் தலைவர் சோம. செந்தமிழ்ச் செல்வன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தார்.

நீடாமங்கலம் ஒன்றியத்தில் 44 கிராம பஞ்சாயத்துக்களிலும் ஐந்துவயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோசொட்டு மருந்து ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

இதற்காக நீடாமங்கலம் ஒன்றியம் கோயில்வெண்ணி அரசு ஆரம்ப சுகாதார
நிலைய பகுதிகளில் 18 முகாம்களும், ராயபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் 18 முகாம்களும், பொதக்குடி அரசு ஆரம்பசுகாதார நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் 18 முகாம்களும், வடுவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் 15 முகாம்களும், தளிக்கோட்டைஅரசு ஆரம்பசுகாதார நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் 6 முகாம்களும், பேரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் 11 முகாம்களும் இயங்கின.

இவை தவிர நெடுஞ்சாலை போக்குவரத்து பயணிகளின் குழந்தைகளுக்காக நீடாமங்கலம் அண்ணா சிலை பகுதியில் நடமாடும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒன்றும் இயங்கியது.

நீடாமங்கலத்தில் போலியோசொட்டு மருந்து முகாமை ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கி முகாமை ஒன்றியக் குழுத் தலைவர் சோம. செந்தமிழ்ச் செல்வன் தொடங்கி வைத்தார்.

வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராணிமுத்துலெட்சுமி,
சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நீடாமங்கலம் ஒன்றியம் காளாச்சேரி கிராமத்தில் ஒன்றியக்குழு
உறுப்பினர் ஆதி.ஜனகர் போலியோ சொட்டு
மருந்து வழங்கும்
முகாமை தொடங்கி வைத்தார்.

நீடாமங்கலம் ஒன்றியம் காளாச்சேரி கிராமத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் ஆதி.ஜனகர் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார்.

நீடாமங்கலம் ஒன்றியத்தில் சுமார் 10 ஆயிரம் குழந்தைகளுக்கு சுகாதார ஆய்வாளர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள் 10 பேர் மேற்பார்வையில் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், தன்னார்வலர்கள் 300க்கும் மேற்பட்டோர் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.