காஞ்சிபுரத்தில் ரெளடி வெட்டிக்கொலை
காஞ்சிபுரம் அருகே வயல்வெளியில் முகம் சிதைந்த நிலையில் ரெளடி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அருகே வயல்வெளியில் முகம் சிதைந்த நிலையில் ரெளடி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் அருகே காவித் தண்டலம் கிராமத்தில் எட்டியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் தமிழ்வேந்தன்(25). இவர் அதே கிராமத்தில் வயல்வெளியில் முகம் சிதைந்த நிலையில் வெட்டப்பட்டு சடலமாக கிடந்தார். இதை பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த சாலவாக்கம் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் சம்பவ இடத்தில் நேரடியாக விசாரணை நடத்தி வருகிறார்.
Advertisement
உயிரிழந்த தமிழ் வேந்தன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளன. சம்பவம் தொடர்பாக சாலவாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.