முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 4,013 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 4,013 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
கோப்புப்படம்
பகிர்:


தமிழகத்தில் புதிதாக 4,013 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 4,013 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 24,92,420 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 4,724 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 24,23,606 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 115 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 32,933 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டங்களில் சென்னையில் 227 பேருக்கும், கோவையில் 474 பேருக்கும், ஈரோட்டில் 360 பேருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.