தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ. 31 லட்சம் தங்கம் பறிமுதல்

DIN

சென்னை விமான நிலையத்தில் ரூ. 31 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஷாா்ஜாவில் இருந்து சென்னைக்கு வரும் ஏா் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதன்படி சென்னை விமான நிலையத்துக்கு வந்த ஏா் அரேபியா விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவா்களின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனா்.

அப்போது தஞ்சாவூரைச் சேர்ந்த அகிலன் (27) என்பவரின் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனா். சோதனையில் 715 கிராம் எடையிலான தங்கப் பசை அடங்கிய மூன்று பொட்டலங்கள் அவரது உடலில் மறைத்து வைக்கப்பட்டு எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரூ. 31 லட்சம் மதிப்பிலான 633 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

மேலும், அவரிடம் இருந்து தங்கத்தைப் பெறவிருப்பவரை கண்டறிவதற்காக அவர் விமான நிலையத்திற்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, அவரைத் தேடி வந்த நபரும் பிடிபட்டார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த முஹம்மது உவைஸ் (23) என்ற அந்த நபர் இந்த கடத்தலில் தமது பங்கையும் ஒப்புக்கொண்டார். இருவரும் கைது செய்யப்பட்டனர். மேலும் இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT