ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.
சென்னை: ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பதிவில், ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும்.
சாதிமறுப்புத் திருமணம் செய்து கொள்வோருக்கு பாதுகாப்பு அளிக்கவும், அவா்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கவும் உரிய சட்டம் இயற்ற வேண்டும். மத்திய, தமிழக ஆட்சியாளா்களுக்கு தருமபுரி இளவரசனின் நினைவு நாளான இந்நாளில் விசிக வேண்டுகோள் விடுக்கிறது என அவா் குறிப்பிட்டுள்ளாா்.