முகப்பு
தமிழ்நாடு

சைக்கிள் பயிற்சி மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவளம் முதல் மாமல்லபுரம் வரை சைக்கிள் பயிற்சி மேற்கொண்டார். 

Updated On : 4 ஜூலை, 2021 at 11:45 AM
பகிர்:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவளம் முதல் மாமல்லபுரம் வரை சைக்கிள் பயிற்சி மேற்கொண்டார். 

முதல்வராவதற்கு முன்பு மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை சைக்கிள் பயிற்சி  மேற்கொண்டு வந்தார். இந்த பயணத்தின் இடையே அவர் மக்களை சந்திப்பதும் வழக்கம். 

இந்நிலையில், முதல்வர் ஆன பிறகு முதல்முறையாக மு.க.ஸ்டாலின் இன்று கிழக்கு கடற்கரைச் சாலையில் சைக்கிள் பயிற்சி மேற்கொண்டார். கோவளம் முதல் மாமல்லபுரம் வரையான இந்த பயணத்தில் சைக்கிளிங் செய்யும் பலரும் பங்கேற்றனர். 

Advertisement

முதல்வர் செல்லும் வழிநெடுக போலீசார் பாதுகாப்பு அளித்தனர். பயணத்தின் இடையே, வழியில் அவர் மக்களையும் சந்தித்து பேசினார். இளைஞர்கள் பலரும் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். 

மாமல்லபுரம் வந்த அவர் ஒரு ஹோட்டலில் ஓய்வு எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.