நாளை திருவாரூர் செல்கிறார் மு.க.ஸ்டாலின்
முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக மு.க.ஸ்டாலின் திருவாரூரில் கருணாநிதி இல்லத்திற்கு நாளை செல்கிறார்.
முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக திருவாரூரில் கருணாநிதி இல்லத்திற்கு மு.க.ஸ்டாலின் நாளை செல்கிறார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக கடந்த மே 7 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிலையில், கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூருக்கு முதல்வர் ஸ்டாலின் நாளை செல்கிறார். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக அவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லத்திற்குச் செல்வது குறிப்பிடத்தக்கது.
அதன்படி நாளை மாலை, திருவாரூர் செல்லும் முதல்வர், கருணாநிதி இல்லத்திற்குச் சென்று மரியாதை செலுத்துகிறார். பின்னர் காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்துகிறார்.
ஜூலை 7 ஆம் தேதி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.