தம்மம்பட்டியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
தம்மம்பட்டியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் மணிமாறன் தலைமை வகித்தார். அரசு போக்குவரத்துக் கழக ( சிஐடியு ) ஆத்தூர் செயலாளர் கலைச்செல்வன், தம்மம்பட்டி சிஐடியு தலைவர் கருணாகரன், சுருட்டு தொழிலாள்கள் சங்கத் தலைவர் சண்முகம், தம்ம்ம்பட்டி சிபிஐ (எம்) கட்சியின் நகர செயலாளர் சிவா கணேசன், விவசாய தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் வெங்கடாசலம், மணி, ஆட்டோ சங்க நிர்வாகி ரவி என இரு, நான்கு சக்கர வாகனப் பராமரிப்புத் தொழிலாளர்கள், சுருட்டு, விவசாயத் தொழிலாளர்கள் என 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வு, நீட் தேர்வு ஆகியனவற்றைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.