தமிழ்நாடு

அஞ்சுகத்தம்மையார் நினைவிடத்தில் குடும்பத்தினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

திருவாரூர் சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சுகத்தம்மையார் நினைவிடத்தில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். 

DIN

திருவாரூர் சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சுகத்தம்மையார் நினைவிடத்தில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். 

முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக மு.க.ஸ்டாலின், தனது குடும்பத்தினருடன் திருவாரூர் கருணாநிதி இல்லத்திற்குச் சென்றுள்ளார். 

கருணாநிதி இல்லத்திற்குச் சென்ற பின்னர் இன்று காலை காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார். 

அப்போது அவரது மனைவி துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா ஸ்டாலின், மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், பேரன், பேத்திகள் உடன் இருந்தனர்.

இதையடுத்து, திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், பச்சிளங் குழந்தைகள் மற்றும் மகப்பேறு சிகிச்சைக்கான தனிக் கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

தொடர்ந்து திருவாரூரில் உள்ள கட்சி நிர்வாகிகளை முதல்வர் சந்திக்க இருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT