முகப்பு
தமிழ்நாடு

பாதுகாப்புத் துறை தனியார்மயம்: புதுச்சேரியில் தொழிற்சங்கங்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

புதுச்சேரியில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்பாட்டம் நடைபெற்றது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் கருப்பு கொடி ஏந்தி ஆர்பாட்டம் நடைபெற்றது. 

பாதுகாப்புத் துறையில் கொண்டு வரப்பட்டுள்ள அவசரச் சட்டத்தை எதிர்த்தும், பாதுகாப்புத் துறை தனியார்மயத்தை எதிர்த்தும், தொழிற்சங்கங்களின் கண்டன இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.    

மத்திய பாஜக அரசு, இந்திய நாட்டின் 220 வருட பழமை வாய்ந்த, பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கி வரும் தளவாட தொழிற்சாலைகளை 7 ஆக பிரித்து தனியார்மயப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. பாதுகாப்பு துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தடை செய்தும், ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது. 

அதன்படி, வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர்களுக்கு விசாரணை இன்றி வேலை நீக்கம், அபராதம், தண்டனை என பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த கருப்புச் சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி பாதுகாப்புத் துறை சங்கங்கள் ஜீலை 8 ஆம் தேதியை கருப்பு தினமாக கடைபிடித்தது.

இதனால் போராட்ட களத்தில் நிற்கும் பாதுகாப்புத் துறை தொழிலாளர்களுக்கு ஆதரவாக, நாடு தழுவிய கண்டன இயக்கங்களை நடத்திட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை முடிவு செய்தது.

அந்த அடிப்படையில், புதுச்சேரியில் வியாழக்கிழமை காலை  மிஷன் வீதி வ.உ.சி பள்ளி அருகில் ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியுசி, ஏஐசிசிடியு, எல்எல்எப், எம்எல்எப், ஐஏயுடியுசி (AITUC, CITU, INTUC, AICCTU, LLF, MLF, AIUTUC) ஆகிய தொழிற்சங்கங்களின் சார்பில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஏஐடியுசி மாநில பொதுச்செயலாளர் கே.சேதுசெல்வம், சிஐடியு புதுச்சேரி பிரதேச செயலாளர் ஜி. சீனுவாசன், ஐஎன்டியுசி மாநில பொதுச்செயலாளர் பி. ஞானசேகரன், ஏஐசிசிடியு பொதுச் செயலாளர் எஸ். புருஷோத்தமன், எல்எல்எப் மாநில செயலாளர் எம். செந்தில், எம்எல்எப் மாநில செயலாளர் வேதா வேனுகோபால், ஐஏயுடியுசி மாநில செயலாளர் எஸ். சிவகுமார் உள்ளிட்டோர் முன்னிலையில் தொழிற்சங்கத்தினர் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

முழு கட்டுரையைப் படிக்க →