முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மேலும் 3,211 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று மேலும் 3,211 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
பகிர்:

தமிழகத்தில் இன்று மேலும் 3,211 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,211 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 366 பேருக்கும், ஈரோட்டில் 251 பேருக்கும், சேலத்தில் 205 பேருக்கும், தஞ்சாவூரில் 190 பேருக்கும், திருப்பூரில் 185 பேருக்கும், சென்னையில் 189 பேருக்கும், பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 
இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,10,059ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 57 பேர் பலியானார்கள். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 33,253ஆக உயர்ந்துள்ளது. மற்றொரு புறம் நோய்த் தொற்றிலிருந்து இன்று 3,565 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து மாநிலத்தில் இதுவரை கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 24,43,141ஆக உயர்ந்துள்ளது. 
மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்படி மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 33,665 போ் உள்ளனா். கடந்த 24 மணிநேரத்தில் 1,54,763 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.