மானாமதுரை பிரத்யங்கிராதேவி கோவிலில் நடைபெற்ற ஆனி அமாவாசை யாகம் 
தமிழ்நாடு

மானாமதுரை பிரத்யங்கிரா தேவி கோவிலில் ஆடி அமாவாசை யாகம் 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வேதியரேந்தல் விலக்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோவிலில் ஆனி அமாவாசை யாகம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

DIN


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வேதியரேந்தல் விலக்கு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோவிலில் ஆனி அமாவாசை யாகம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பின் நடைபெற்ற இந்த யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும், நாட்டைவிட்டு கரொனா தொற்று ஒழிய வேண்டியும்  கோவில் யாக சாலையில் நடைபெற்ற இந்த யாகத்தில் பட்டுப் புடவைகள், பூ மாலைகள், திரவிய் பொருள்கள், தங்கம், வெள்ளி, இனிப்பு வகைகள் மிளகு, உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் இடப்பட்டன.

தஞ்சை குருஜி கணபதி சுப்பிரமணியம் தலைமையிலான வேத விற்பன்னர்கள் யாகத்தை நடத்தி வைத்தனர்.

யாகத்தின் போது யாகசாலையில் உள்ள பிரத்யங்கிரா தேவி உருவப்படம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

பூர்ணாஹூதி முடிந்து தீபாராதனை காட்டப்பட்டதும் யாகத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீர்க் கடம் மேளதாளம் முழங்க பிரத்யங்கிரா தேவி சன்னதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு புனித நீரால் அம்பாளுக்கு பாத சமர்ப்பணம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது.

ஏராளமான பக்தர்கள் பிரத்யங்கிரா தேவியை தரிசனம் செய்தனர் பின்னர் கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தில் பங்கேற்றனர்.

யாகத்திற்கான ஏற்பாடுகளை பிரத்தியங்கிரா தேவி மடாலய நிர்வாகி ஞானசேகரன் சுவாமிகள் மற்றும் மாதஜி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT