புதுச்சேரி பேருந்து சேவைக்கு அனுமதி: கூடுதல் தளர்வுகள் என்னென்ன?
தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் பொதுமுடக்கம் ஜூலை 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதோடு, புதுச்சேரிக்கான பேருந்து சேவைக்கு அனுமதி உள்ளிட்ட சில கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடுபுதுச்சேரி பேருந்து சேவைக்கு அனுமதி: கூடுதல் தளர்வுகள் என்னென்ன?
தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் பொதுமுடக்கம் ஜூலை 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதோடு, புதுச்சேரிக்கான பேருந்து சேவைக்கு அனுமதி உள்ளிட்ட சில கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் பொதுமுடக்கம் ஜூலை 19ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதோடு, புதுச்சேரிக்கான பேருந்து சேவைக்கு அனுமதி உள்ளிட்ட சில கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கரோனா நோய்த் தொற்று பரவலைக் குறைக்கத் தேவையான கட்டுப்பாடுகளை 31-7-2021 வரை தொடர்ந்து அமல்படுத்த மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில், 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.
இதையும் படிக்கலாமே.. ஜிகா வைரஸ் எப்படி பரவுகிறது? ஏன் அச்சப்பட வேண்டும்?
தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 12-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தின் கரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஜூலை 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இரவு 8.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள் 12-7-2021 முதல் இரவு 9.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
மேலும், பின்வரும் கூடுதல் செயல்பாடுகளும் அனுமதிக்கப்படுகின்றன.
இதையும் படிக்கலாமே.. ஆகஸ்டில் நடக்குமா நீட் தேர்வு, என்ன சொல்கிறது தேசிய தேர்வு முகமை?
புதுச்சேரிக்கான பேருந்து சேவை தொடங்கப்படுகிறது.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேர்வுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்த விபரங்களை தேர்வு நடத்தும் அமைப்புகள் முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கவேண்டும்.
உணவகங்கள், தேநீர் கடைகள், அடுமனைகள், நடைபாதைக் கடைகள், இனிப்பு, காரவகை பண்டங்கள் விற்பனை கடைகள் ஆகியவை வழக்கமான நிபந்தனைகளுக்குட்பட்டு 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.