ஆரியபட்டியில் மரக்கன்றுகள் நடும் விழா
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆரியபட்டி கிராமத்தில் மதுரை ராயல் எம்பரர்ஸ் லயன்ஸ் சங்கம் சார்பாக 1,000 மரக்கன்றுகள் நடும் விழா துவக்கி வைக்கப்பட்டது.
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆரியபட்டி கிராமத்தில் மதுரை ராயல் எம்பரர்ஸ் லயன்ஸ் சங்கம் சார்பாக 1,000 மரக்கன்றுகள் நடும் விழா துவக்கி வைக்கப்பட்டது.
மதுரை ராயல் எம்பரர்ஸ் லயன்ஸ் சங்கம் சார்பாக செல்லம்பட்டி ஒன்றியம் ஆரியபட்டி, ராமநாதபுரம் கல்யாண கருப்புச்சாமி பெரிய ஊரணியில் 1000 மரக்கன்றுகள் நடும் விழாவில் உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் பி.அய்யப்பன், லயன்ஸ் சங்கம் இரண்டாம் துணை மாவட்ட ஆளுநர் இராதாகிருஷ்ணன், மரக்கன்றுகளை நட்டு வைத்து துவக்கிவைத்தனர்.
இதில், செல்லம்பட்டி ஒன்றியச் செயலாளர் எம்.வி.பி.ராஜா, நகரச் செயலாளர் பூமாராஜா, ஆவின் நிர்வாகக்குழு துரை தனராஜன், மாணவரணி மகேந்திர பாண்டியன், ஊராட்சி மன்றத் தலைவர் ஆரியபட்டி மகேஸ்வரி பாண்டியன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிந்துபட்டி ஜெயராமன், ஒன்றிய கவுன்சிலர் வசந்த சின்னகாமன், துணை ஆணையாளர் பரமசிவம், லயன்ஸ் சங்க நிர்வாகிகள் தலைவர் பாபு, செயலாளர் முத்துமணி, பொருளாளர் சுசீந்தர், சங்க ஜிஎஸ்டி ஒருங்கிணைப்பாளர் ஆம்ஸ்ட்ராங் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.