முகப்பு
தமிழ்நாடு

சிவகாசியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸார் சைக்கிள் பேரணி

விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் செவ்வாய்க்கிழமை பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சிவகாசியில் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:37 AM
சிவகாசியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸார் சைக்கிள் பேரணி
பகிர்:

விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் செவ்வாய்க்கிழமை பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சிவகாசியில் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.

சிவகாசி பேருந்து நிலையம் முன்பு தொடங்கிய இந்த ஊர்வலத்தை அமைப்பின் மாவட்டத் தலைவர் இஸ்மாயில் தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் சிக்கந்தர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் தெற்கு ரத வீதி, மேல ரதவீதி, காவல்நிலைய சாலை வழியே சென்று தலைமை அஞ்சலகம் முன்பு உள்ள காமராஜர் உருவச் சிலை அருகே சென்று முடிவடைந்தது.

ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசினைக் கண்டித்து கோஷமிட்டனர். இந்த ஊர்வலத்தில் மாணவர் காங்கிரஸ் துணைத்தலைவர் சின்னத்தம்பி, வட்டாரத் தலைவர் எம் கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
முழு கட்டுரையைப் படிக்க →