நூற்றாண்டு காணும் சங்கரய்யா: மநீம தலைவர் கமல் வாழ்த்து 
தமிழ்நாடு

நூற்றாண்டு காணும் சங்கரய்யா: மநீம தலைவர் கமல் வாழ்த்து

சுதந்திரப் போராட்ட வீரரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என்.சங்கரய்யாவின் 100-ஆவது பிறந்த நாளையொட்டி மநீம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

DIN

சுதந்திரப் போராட்ட வீரரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என்.சங்கரய்யாவின் 100-ஆவது பிறந்த நாளையொட்டி மநீம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும், விடுதலைப் போராட்டவீரருமான சங்கரய்யா தனது 100-ஆவது பிறந்த நாளை வியாழக்கிழமை (ஜூலை 15) கொண்டாட உள்ளாா். அதையொட்டி பல்வேறு தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள்நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “வறுமையின் நிறம் சிவப்பு அல்ல; வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு’ என முழங்கிய தோழர் என்.சங்கரய்யா 100-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். விடுதலைப்போர் துவங்கி இன்று வரை நீளும் நெடிய போராட்ட வரலாற்றினைக் கொண்ட முன்னுதாரண தோழருக்கு என் வந்தனங்களும் வாழ்த்துக்களும்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

SCROLL FOR NEXT