தமிழ்நாடு

நீலகிரி, கோவையில் கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்

DIN

சென்னை: மேற்குத் தொடர்ச்சி மலையை உள்ளடக்கிய நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை தொடரும். மேலும், தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்றும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

கோவையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், இன்றும் கனமழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வால்பாறையிலும் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில் 9 செ.மீ. மழையும், நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT