காமராஜர் பிறந்தநாளையொட்டி சங்ககிரி ரோட்டரி சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் டி.ஹெலினாகிறிஸ்டோபர் ஏபிஎன் நினைவு நூலகத்திற்கு புத்தகங்களை நூலகர் ஜோதியிடம் வழங்குகிறார். 
தமிழ்நாடு

அக்கமாபேட்டை ஏபிஎன் நினைவு நூலகத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா 

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டையில் உள்ள ஏபிஎன் நினைவு நூலகமும், சங்ககிரி ரோட்டரி சங்கமும் இணைந்து

DIN


சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டையில் உள்ள ஏபிஎன் நினைவு நூலகமும், சங்ககிரி ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்திய முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழா  நூலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. 

ரோட்டரி சங்கத்தலைவி டி.ஹெலினாகிறிஸ்டோபர் தலைமை வகித்து நூலக வளாகத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் காமராஜர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் ரோட்டரி சங்கத்தின் சார்பில் பல்வேறு தலைப்புகளில்  25க்கும் மேற்பட்ட புத்தகங்களை நூலகத்திற்கு இலவசமாக வழங்கிப் பேசினார். பின்னர் நூலக வளாகத்தில் மரக்கன்று ஒன்றினை நட்டு வைத்தார். 

அக்கமாபேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். 

நூலகத்தின் ஆலோசகரும், ஓய்வு பெற்ற ஆசிரியர் முனியப்பன், நூலகத்தின் மேலாளர் பசுமை சீனிவாசன், நூலகர் ஜோதி, ரோட்டரி சங்கத்தின் பொருளாளர் கே.செந்தில்குமார், மாவட்ட நிர்வாகி ஏ.வெங்கடேஸ்வர குப்தா, பேரூராட்சி முனனாள் கவுன்சிலர் முருகன், மக்கள் மன்ற நிர்வாகி வெங்கடாஜலம், பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனர் மரம் பழனிசாமி, பசுமை கனகராஜ்   உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது!

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

SCROLL FOR NEXT