சிதம்பரத்தில் தமாகா சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா
சிதம்பரத்தில் நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கீழரதவீதியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகள் வழங்கி வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
சிதம்பரம்: சிதம்பரத்தில் நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கீழரதவீதியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகள் வழங்கி வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் தில்லை ஆர்.மக்கீன் தலைமை வகித்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் எம்.என்.ராதா, மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கே.வைத்தி, கே.நாகராஜ், ராஜா சம்பத்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் கே.ரஜினிகாந்த், மாவட்ட தொண்டரணி தலைவர் தில்லை குமார், மகளிரணி ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தமாகா மாநில பொதுச்செயலாளர் செயலாளர் வழக்குரைஞர் ஏ.எஸ்.வேல்முருகன் பங்கேற்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, ஏழை, எளிய மக்களுக்கு அரிசி மற்றும் முகக்கவசம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சிதம்பரம் நகரில் வார்டு 2, 33, 25 ஆகிய வார்டுகளில் தமாகா கொடியேற்றப்பட்டது.
நிகழ்ச்சிகளில் மாவட்ட மாணவரணி தலைவர் என்.மணிகண்டன்,இளைஞரணி ராஜ்குமார், தில்லை ராஜா, முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் ஜனகம், மீனா செல்வம், மகளிரணி தில்லைசெல்வி, எஸ்.எஸ்.நடராஜன், சின்ராஜ், பட்டாபிராமன், சம்பந்தமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.