தமிழ்நாடு

டிவிட்டரில் வைரலாகும் ரியல் ஹீரோ ஜோசப்  விஜய் 

DIN

நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்திருந்து  இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு  கேட்டு தொடர்ந்திருந்த மனுவை விசாரித்த நீதிபதி  இது  வரியிலிருந்து தப்பிக்கும் முயற்சி என்றதுடன்   நுழைவு வரியை முறையாகச் செலுத்தி இருக்க வேண்டும் .தேசத்தின் பொருளாதார வளா்ச்சிக்கு வரிதான் முதுகெலும்பாக உள்ளது. வரி செலுத்துவது என்பது கட்டாயமாகும். தனி நபரின் விருப்பத்தின் அடிப்படையில் செலுத்துவதற்கு, இது நன்கொடை இல்லை. வரி வசூல் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு தான் அரசு நாட்டைப் பாதுகாக்கிறது. ஏழைகளுக்கான மருத்துவம், கல்வி உள்ளிட்ட மக்கள் நல பணிகளை மேற்கொள்கிறது என்றார்.

வரி ஏய்ப்பை செய்த காரணத்தினாலும் பெரும் மதிப்புமிக்க காரை வாங்கும் அளவிற்ககு பணம் கொண்டவர்கள் அதற்கான வரியை செலுத்தாமல் இருப்பது தவறு எனக்கூறியதுடன்   வழக்கு செலவிற்காக   நடிகர் விஜய்க்கு 1 லச்சம் அபராதம்  விதிப்பதாகவும்  அபராதத்  தொகையை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கவும் கட்டளையிட்டார் .
.
இதன் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தகளங்களில் நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் தற்போது   சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டரில் #RealHeroJosephVijay  என்கிற ஹாஷ்டாக் வைராலகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

SCROLL FOR NEXT