முகப்பு
தமிழ்நாடு

குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்?

புது தில்லி செல்லும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், வரும் 19ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசுகிறார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
குடியரசுத் தலைவரை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
பகிர்:

சென்னை: புது தில்லி செல்லும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், வரும் 19ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்துப் பேசவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், முதல்வரின் தில்லிப் பயணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

தமிழக முதல்வரான பிறகு, மு.க. ஸ்டாலின், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேச உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக ஜூலை 18ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் புது தில்லி செல்லவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், ஜூலை 19-ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேசவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →