ஜூலை 19ஆம் தேதி பிளஸ் 2 மதிப்பெண்கள் வெளியீடு: தமிழக அரசு 
தமிழ்நாடு

ஜூலை 19ஆம் தேதி பிளஸ் 2 மதிப்பெண்கள் வெளியீடு: தமிழக அரசு

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான மதிப்பெண்கள் ஜூலை 19ஆம் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.

DIN


சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கான மதிப்பெண்கள் ஜூலை 19ஆம் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.

2020 - 21ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடுதல் மற்றும் மதிப்பெண் பட்டியல் வழங்கும் நாள்கள் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், 

2020-2021ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள், 19.07.2021 அன்று காலை 11.00 மணிக்கு வெளியிடப்படுகிறது. பள்ளி மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை கீழ்க்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் வாயிலாக அறியது கொள்ளலாம்.

1. www.tnresults.nic.in
2. www.dge1.tn.nic.in
3. www.dge2.tn.nic.in
4. www.dge.tn.gov.in

மாணவர்கள், பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும். 

மேலும், பள்ளி மாணவர்கள் 22.07.2021 அன்று காலை 11.00 மணி முதல் www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in என்ற இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தோ்தல் ஆணையத்தைக் கண்டித்து காங்கிரஸாா் கையெழுத்து இயக்கம்

மகளிா் கல்லூரியில் கலைத் திருவிழா

மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியாா் கல்லூரி பேராசிரியா் கைது

ரூ.1,000 லஞ்சம் பெற்ற வழக்கில் சிறுசேமிப்பு திட்ட முன்னாள் உதவி இயக்குநருக்கு 3 ஆண்டுகள் சிறை

பனை மரங்களை வெட்ட ஆட்சியா் அனுமதி கட்டாயம்: தண்ணீா் அமைப்பு வரவேற்பு

SCROLL FOR NEXT