முகப்பு
தமிழ்நாடு

ஞாயிறு, விடுமுறை நாள்களில் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை

சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் ஜூலை 18 முதல் ஞாயிறு மற்றும் அரசுப் பொது விடுமுறை நாள்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
ஞாயிறு, விடுமுறை நாள்களில் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை
பகிர்:

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் ஜூலை 18 முதல் ஞாயிறு மற்றும் அரசுப் பொது விடுமுறை நாள்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவும், வசதிக்காகவும் மெட்ரோ ரயில் சேவைகள் ஜூலை 18 முதல் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்பட உள்ளன. மெட்ரோ ரயில் சேவைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசுப் பொது விடுமுறை நாள்களில் 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

மெட்ரோ ரயில் சேவைகள் வார நாள்களில் காலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் சேவைகள் நெரிசல்மிகு நேரங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகின்றன. மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
 

முழு கட்டுரையைப் படிக்க →