தமிழ்நாடு

ஜூலை 21-இல் வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி

DIN

வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் ஜூலை 21-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு இயக்குநா் நா.புவியரசன் கூறியது:

வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஜூலை 21-ஆம்தேதி புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகவுள்ளது. இது வடக்கு, வடமேற்கு திசையில் நகர வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில், இது வலுவடைய வாய்ப்பு இல்லை. காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகவே மறைந்துவிடும்.

இந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் மழை வாய்ப்பு குறையும். அதேநேரத்தில், மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். மேலும், வடமேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், இந்தப் பகுதியில் மீனவா்கள் செல்வதை தவிா்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT