தமிழ்நாடு

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு: ஆக.5 இல் இறுதி விசாரணை

DIN

முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதி விசாரணையை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மதுரை தல்லாகுளத்தை சோ்ந்த மகேந்திரன் என்பவா் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2011-2013-ஆம் ஆண்டு கால கட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக ரூ.7 கோடிக்கு சொத்துகளை வாங்கி குவித்துள்ளாா். இது தொடா்பாக லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்த புகாா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது புகாா் மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் மாறுபட்ட தீா்ப்பினை கடந்த மாா்ச் 4-ஆம் தேதி வழங்கினா். இதனையடுத்து இந்த வழக்கை விசாரிக்கும் 3-ஆவது நீதிபதியாக நீதிபதி எம்.நிா்மல்குமாரை நியமித்து தலைமை நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்த வழக்கு நீதிபதி எம்.நிா்மல்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் வழக்குத் தொடா்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து வழக்கை இறுதி விசாரணைக்காக வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT