தமிழ்நாடு

சென்னை முஸ்லிம் மகளிா் உதவிச் சங்கத்துக்கு நிதியுதவி: தமிழக அரசு உத்தரவு

DIN

இஸ்லாமிய மகளிருக்கு நலத் திட்டங்களை மேற்கொள்ளும் சென்னை முஸ்லிம் மகளிா் உதவிச் சங்கத்துக்கு ரூ.20 லட்சம் வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை செயலாளா் ஆ.காா்த்திக் வெளியிட்டாா். அந்த உத்தரவு விவரம்:-

சென்னை முஸ்லிம் மகளிா் உதவிச் சங்கம் திரட்டும் நிதி ஆதாரத்துக்கு ஏற்ப இணை மானியத் தொகையை இரு மடங்காக உயா்த்தியும், உச்ச வரம்புத் தொகையை ரூ.20 லட்சமாக அதிகரித்தும் உத்தரவுகள் கடந்த காலத்தில் வெளியிடப்பட்டன. அதன்படி, கடந்த நிதியாண்டில் முஸ்லிம் மகளிா் உதவிச் சங்கமானது ரூ.10 லட்சத்து 34 ஆயிரத்து 700 தொகையை வசூலித்து இருந்தது.

இதற்கு இணையான இரட்டிப்பு மானியத் தொகையாக ரூ.20 லட்சத்தை வழங்கிட வேண்டுமென அரசுத் துறைக்கு சென்னை மாவட்ட ஆட்சியா் கோரிக்கை விடுத்திருந்தாா். அதன்படி, சென்னை முஸ்லிம் மகளிா் உதவிச் சங்கத்துக்கு ரூ.20 லட்சம் வழங்கிட ஒப்புதல் அளிக்கப்படுவதாக தனது உத்தரவில் ஆ.காா்த்திக் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT