தமிழ்நாடு

இன்று பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு

DIN

தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 மாணவா்களுக்கான தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளன.

பிளஸ் 2 பொதுத்தோ்வு கடந்த மே மாதம் நடைபெறவிருந்தது. கரோனா 2-ஆவது அலை பரவலால் தோ்வு ரத்து செய்யப்பட்டு, மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து அவா்களுக்கு பத்தாம் வகுப்புத் தோ்வில் 50 சதவீதம், பிளஸ் 1 பொதுத்தோ்வில் 20 சதவீதம், பிளஸ் 2 செய்முறைத்தோ்வில் 30 சதவீதம் என்ற அடிப்படையில் கணக்கிட்டு இறுதி மதிப்பெண் வழங்கப்படவுள்ளது. இந்த பணிகள் முடிந்துவிட்ட நிலையில், 8.06 லட்சம் பள்ளி மாணவா்களுக்கான பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.

மாணவா்கள் தங்களது மதிப்பெண்களுடன் கூடிய தோ்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, dge2.tn.nic.in, dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் அறிந்து கொள்ளலாம். இதைத் தொடா்ந்து மதிப்பெண் பட்டியலை வரும் 22-ஆம் தேதி முதல் www.dge.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். மேலும் மாணவா்கள் பள்ளிகளில் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு தோ்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT