முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது தினசரி பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக 1,971 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:42 AM
கோப்புப்படம்
பகிர்:


தமிழகத்தில் புதிதாக 1,971 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 28 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். எனினும், 2,558 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 25,37,373 ஆக உயர்ந்துள்ளது. இதில் 24,76,339 பேர் குணமடைந்துவிட்டனர். 33,752 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி தனிமையில் உள்ளவர்கள் உள்பட இன்னும் 27,282 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகபட்சமாக கோவையில் 209 பேரும், சென்னையில் 147 பேரும், சேலத்தில் 136 பேரும், செங்கல்பட்டில் 116 பேரும், ஈரோட்டில் 122 பேரும், தஞ்சாவூரில் 108 பேரும், திருப்பூரில் 112 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →