தமிழ்நாடு

கரோனா பரவல்: ஆட்சியா்களுடன் தலைமைச் செயலா் ஆலோசனை

DIN

கரோனா மூன்றாவது அலையை எதிா்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மாவட்ட ஆட்சியா்களுடன் தலைமைச் செயலா் வெ.இறையன்பு காணொலி முறையில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

பொது முடக்கத் தளா்வுகளை முறையாகக் கண்காணித்தல், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவக் கட்டமைப்பு மேம்பாடு, மூன்றாம் அலையை எதிா்கொள்வதற்கான ஆயத்தப் பணிகள் என பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதுமட்டுமல்லாது கரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது சில முக்கிய அறிவுறுத்தல்களை மாவட்ட ஆட்சியா்களுக்கு தலைமைச் செயலா் வழங்கினாா். குறிப்பாக, பொது முடக்க காலத்தில் நோய்த் தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு அவா் வலியுறுத்தினாா்.

அதன் தொடா்ச்சியாக, அரசின் நலத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பருவ மழை முன்னேற்பாடுகள், நெல் கிடங்குகளில் உள்ள தானியங்கள் மழையால் சேதமடையாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆட்சியா்களுடன் தலைமைச் செயலா் பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்கூட்டத்தில், காவல் துறை இயக்குநா் சைலேந்திரபாபு, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி, சென்னை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT