முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 1,904 பேருக்கு கரோனா; 30 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,904 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. மேலும் புதிதாக 30 பேர் உயிரிழந்தனர். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
தமிழகத்தில் புதிதாக 1,904 பேருக்கு கரோனா; 30 பேர் பலி
பகிர்:

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,904 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. மேலும் புதிதாக 30 பேர் உயிரிழந்தனர். 

தமிழகத்தில் ஒருநாள் கரோனா பாதிப்பு 60 நாள்களுக்குப் பிறகு 2 ஆயிரத்துக்கு கீழ் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,904 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது.

இதனால், இதுவரை மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,39,277-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 30 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,782-ஆக அதிகரித்துள்ளது.

ஒரு நாளில் மட்டும் 2,439 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில், மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை  24,78,778-ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 26,717 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அதிகபட்சமாக கோவையில் 204 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 141 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் புதிதாக 3 பேர் உயிரிழந்த நிலையில், 135 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1,687 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →