மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் கடல்சார் மீன்வள மசோதாவை தாக்கல் செய்ய வேண்டாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்,
மீன்வள மசோதாவை நாடாளுமன்றத்தில் முன்மொழிய வேண்டாம் என பிரதமருக்கு முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.
மசோதாவின் உள்பிரிவுகள் மீனவர்களுக்கு எதிராக இருப்பதால் அமைதியின்மை, எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலங்களுக்கான உரிமைகளை மீறும் சில உள்பிரிவை மசோதா கொண்டுள்ளது.
அனைத்து தரப்பினரும் ஆலோசித்த பின் புதிய மசோதாவை தாக்கல் செய்யலாம் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.