தொழில் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்கள்: ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது குழு
தொழில் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை நிலை குறித்த அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது நீதியரசர் முருகேசன் தலைமையிலான குழு.
தொழில் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை நிலை குறித்த அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது நீதியரசர் முருகேசன் தலைமையிலான குழு.
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அறிக்கை வழங்கப்பட்டது.
தொழில் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை நிலை குறித்து ஆராய, நீதியரசர் முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஒரு மாத காலமாக தொழில் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறித்து ஆராய்ந்த பிறகு அதனை அறிக்கையாக தொகுத்து முதல்வரிடம் நீதியரசர் தலைமையிலான குழு வழங்கியுள்ளது.
நீதியரசன் முருகேசன் குழு ஆய்வு செய்து வழங்கியுள்ள பரிந்துரைகள் நடப்பு கல்வி ஆண்டிலேயே அமலாக வாய்ப்புள்ளது.