தமிழ்நாட்டில் மேலும் 1,891 பேருக்கு கரோனா தொற்று
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,891 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. மேலும் புதிதாக 27 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,891 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. மேலும் புதிதாக 27 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக புதன்கிழமை சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,891 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது.
இதனால், இதுவரை மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,41,168-ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக 27 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,809-ஆக அதிகரித்துள்ளது.
ஒரு நாளில் மட்டும் 2,423 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில், மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 24,81,201-ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு 26,158 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.