முகப்பு
தமிழ்நாடு

பக்ரீத் பண்டிகை: போடியில் முஸ்லிம்கள் தொழுகை

போடியில் புதன்கிழமை, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் தொழுகை நடத்தி, நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

Updated On : 21 ஜூலை, 2021 at 3:09 PM
பகிர்:

போடி: போடியில் புதன்கிழமை, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் தொழுகை நடத்தி, நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நாடு முழுவதும் முஸ்லிம்கள் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். போடியில் பெரியபள்ளி வாசல், வடக்கு பள்ளி வாசல், டி.வி.கே.கே. நகர் பள்ளி வாசல், மேலத்தெரு அம்மாகுளம் பள்ளிவாசல் ஆகிய பள்ளிவாசல்களில் தொழுகை நடத்தப்பட்டது.

இதில் கரோனா நோய்த்தொற்று தீரவும், பொதுமக்கள் நலமுடன் வாழவும் பிரார்த்தனை செய்யப்பட்டது. பக்ரீத் பண்டியைகை முன்னிட்டு முஸ்லிம்கள் புத்தாடை உடுத்தி, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஈகைத் திருநாளை நினைவு கூறும் வகையில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். கரோனா காரணமாக ஊர்வலம் போன்றவை ரத்து செய்யப்பட்டன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.