தமிழ்நாடு

தமிழகத்தில் பரவலான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

DIN

தமிழகம் முழுவதும் இன்று பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தியில்,

தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் இரண்டு நாள்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூலை 25 வரை நீலகிரி, கோவை மாவட்டத்தில் கனமழையும், அடுத்த 48 மணிநேரத்திற்கு தேனி, திண்டுக்கல், தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி, வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், ஜூலை 25 வரை தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல், கர்நாடகம், கேரளம், லட்சத்தீவு, தென் கிழக்கு அரபிக் கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT